Monday, October 12, 2015

முத்தம்

IndiBlogger - The Indian Blogger Community முத்தத்தில் எத்தனை வகை காணீர் 
வெள்ளைக்கார முத்தம் உவக்கும் 
·பிரெஞ்சு முத்தம் இன்னும் சிறப்பு 
அறைக்குள்ளே அந்தரங்கம் அன்று 
அம்பலத்திலாடுது நாகரிகம் புதிது 
எதிர்பாலாருக்குண்டு ஆசை முத்தம் 
ஒரே பாலாருக்குமுண்டு அன்பு முத்தம் 
திரையில் உதடு துடைக்கும் பூடகமன்று 
துவக்கக் காட்சியே நீண்ட முத்தமின்று 
அடுத்த கட்டம் கடிப்பு ரசிகர் துடிப்பு 
பாரதி பாவம் பாசத்தை நெஞ்சாங்கூட்டில் 
குவித்து சிறு கண்ணம்மாவின் கன்னத்தில் 
முத்தமிட்டு கள்வெறி கொண்டான் 
கண்டவரும் முத்தமிட அதை கண்டவர் 
போதை கொண்டனரா மரத்துப்போயினரா 
இன்னாரை இன்னார் இன்னவிடத்தில் 
இன்ன காரணமாய் இலக்கணமாய் 
இன்று முத்தமிட அவசியமில்லை 
அவசரந்தான் இதற்கு பொறுமையெதற்கு 
கிளுகிளுப்பான அனுபவமெல்லாம் 
யந்திரத்தனத்தில் சிக்கியாச்சி 
ஏதோயிருக்கு அதிலே என்ற குறுகுறுப்பு 
காணாப்போச்சி சாதாரண சங்கதியாச்சி 
சுள்ளென்ற ஊறுகாயின்று பத்தியமான 
உப்புசப்பில்லா சமாச்சாரமாய் ஆகியாச்சி 
சல்லிசான கடைச்சரக்கிதற்கு ஏது கிராக்கி

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community