Monday, October 12, 2015

பிரயாணம்

IndiBlogger - The Indian Blogger Community பிரயாணம் செய்கிறேன்
பயணச்சீட்டில்லாமலே
பல ஊரை தாண்டி வந்து
பல பேரை நட்பு கொண்டு
பல கதைகள் உள்வாங்கி
பல கருத்து உருவாகி
பரிமாணங்கள் பெரிதாகி
பயந்து பிரமித்து பரவசப்பட்டு
படித்துக் களிக்க பக்கங்கள்
பார்த்து மகிழ காட்சிகள்
புதிதாய் ஏறும் பயணிகள்
பாதியிலே இறங்கியவர்
பார்த்துப் பார்த்துப் பழகி
பழசாகாத புதுமைகள்
புரியாத புதிர்கள்
பல பருவத்தினர் பயணிக்க
போகட்டும் பாதை நீண்டு
புது யுக உல்லாச வண்டி

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community