Monday, October 12, 2015

உல்லாச உலா

IndiBlogger - The Indian Blogger Community மொட்டை மாடியில் மல்லாந்து படுத்திருந்து 
கொட்டாவி விட்ட நித்திரை வராத 
நிச்சலனமான சுகமான கணங்களிலே 
வெட்டவெளியில் விதைத்த வைரங்களை 
விரும்பி வெறித்தேன் விழிக்கு வலிக்காமலே 
மெய்யதைக் கிடத்திவிட்டு மனதை கடத்திச் சென்று 
பொய் வழி நடத்தி பரவசமூட்டியதே என் கற்பனையே 

பாட்டியை தன்னோடு கொண்டு சென்ற நிலவின் 
மங்கிய ஒளியில் நானும் கண்டேன் பாரதியின் 
பதினாறு வயது பருவ மங்கையை 
கனவோடு கேட்டேன் கனிவான ஆரூடம் 

கொட்டிக் கிடந்த நட்சத்திரங்களில் 
துருவனும் தவமுனிவர் பத்தினியரும் 
அமரரான என் குல மூதாதையரும் 
மின்னிக் கிடந்து வாழ்த்தினரே 

கட்டம் கட்டி குடியிருந்து 
வீடு மாறி காலம் மாற்றி 
காலங்காலமாய் ஆட்டி வரும் கிரகங்களுக்கும் 
சோதனையும் கரைந்து போகும் கட்டமும் 
கண்ணால் நானும் கண்டேனே 

சலனமில்லா ககன வெளியில் 
கற்பனை சிறகில் பறந்து வருகையிலே 
இந்திரனின் தேவலோக தேனிசையும் 
தெளிவாக கேட்டுன்புற்றேனே 

உல்லாச உலா முடிந்த பின்னும் 
உறங்க நான் துவங்கும் முன்னும் 
வானத்துக்கு மேலே நீண்டிழுக்கும் 
முடிவில்லா ஆழக்கருமையிலே 
என்னவளின் கருவிழி கண்டேனே 

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community